தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: கார் கதவுகள் மூடியதால் 3 சிறுவர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு - காருக்குள் விளையாடி சிறுவர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே பணங்குடியில் மூன்று சிறுவர்கள் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கதவுகள் மூடியததை அடுத்து, அவர்கள் மூவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

காருக்குள் விளையாடிய 3 சிறுவர்கள் மூச்சுத்திணறி ஏற்பட்டு உயிரிழப்பு
காருக்குள் விளையாடிய 3 சிறுவர்கள் மூச்சுத்திணறி ஏற்பட்டு உயிரிழப்பு

By

Published : Jun 4, 2022, 8:00 PM IST

Updated : Jun 4, 2022, 9:40 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம்பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜன் மகள் நித்திஷா (7), மகன் நித்திஷ் (5) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சுதாகரின் மகன் கபிசந்த் (4) ஆகிய மூன்று சிறுவர்களும், நாகராஜின் சகோதரர் மணிகண்டனின் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, காரின் கதவுகள் திடீரென மூடப்பட்டதால், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறுவர்களுக்கு காரின் கதவை திறக்க தெரியாததால், மூவருக்கும் மூச்சுத் திணறல் அதிகமாகி அவர்கள் காரின் உள்ளேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த நித்திஷா, நித்திஷ்

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு சபாநாயகர் அப்பாவுவின் சொந்த ஊர் ஆகும்.

இதையும் படிங்க:சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... நான்காவது நபர் கைது...

Last Updated : Jun 4, 2022, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details