திருநெல்வேலி:அம்பை அருகேவுள்ள கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவைச்சேர்ந்தவர், கார்த்திக். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் அவரது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக பாப்பாகுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தீவிரமாகத் தேடினர். இந்நிலையில் செல்போன் சிக்னல், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப வசதியுடன் குழந்தையை கடத்திச்சென்ற நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.