திருநெல்வேலி:பணகுடி அருகேவுள்ள பகுதியைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைனில் ரம்மி மூலமாக சீட்டு விளையாடும் பழக்கத்தை கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடி கடந்த ஒரு வருட காலத்திற்குள் சுமார் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ஒரு லட்சம் ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதற்கிடையில் அடுத்தடுத்து பணத்தை இழந்த விரக்தியால் சிவன்ராஜ் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.