தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன.
அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 84 தடுப்பூசி மையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தவிர மீதமுள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி இரவு தமிழ்நாடு அரசு நெல்லை மாவட்டத்திற்கு கோவிஷீல்டு ஆறாயிரம், கோவாக்சின் ஆயிரம் என மொத்தம் ஏழாயிரம் தடுப்பூசிகள் அனுப்பிவைத்தது.
இதையடுத்து இந்தத் தடுப்பூசிகளை நேற்று (ஜூன் 3) மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களுக்கு சுகாதார அலுவலர்கள் அனுப்பிவைத்தனர். மிகக் குறைந்த அளவே தடுப்பூசி அனுப்பப்பட்டதால் மையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.