திருநெல்வேலி: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பின் போது எதிர்ப்பினை தெரிவித்ததோடு, சசிகலா குறித்த பல்வேறு தகவல்களையும் கூறினார்.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா குறித்தும், அவரின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வந்து எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.