கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றன. அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்துவருகின்றனர்.
150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி அமைப்பினர் - Tirunelveli News
திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேரவையை சேர்ந்தவர்கள், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஜெகன்மோகன் ரெட்டிப் பேரவை
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், அப்பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.