சென்னை:உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 31) சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதற்காக கல்லூரி மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் மேடைக்கு வந்ததும் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட தயாராகினர், அப்போது ஆட்சியர் விஷ்ணு நீங்களும் வந்து பாடுங்க என திருநங்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.