தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம் - etvtamil

கன்னியாகுமரி பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி, நெல்லை பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 23, 2021, 11:57 AM IST

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜான் பொன்னையா இந்து மதம் பற்றியும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பொது மேடையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் பாதிரியாரை கண்டித்து பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் வேல் ஆறுமுகம் தலைமையில் நெல்லை மாவட்ட பாஜகவினர் இன்று (ஜூலை 23) டவுன் சந்தி முக்கு பிள்ளையார் கோயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லையில் பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்

அப்போது மறைத்து வைத்திருந்த பாதிரியாரின் உருவபொம்மையை பாஜகவினர் தீ வைத்து எரிக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் உருவ பொம்மையை எரிக்க விடாமல் கைப்பற்றினர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதிரியாருக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

ABOUT THE AUTHOR

...view details