தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுகவுடன் பாஜக கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" - நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி செய்திகள்

தற்போது வரை அதிமுக கூட்டணியிலேயே பாஜக நீடிக்கிறது என்றும்; திமுகவுடன் பாஜக கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

By

Published : Dec 22, 2022, 11:09 PM IST

Updated : Dec 23, 2022, 12:26 PM IST

திருநெல்வேலி:பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், தனது தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் திருநெல்வேலி கங்கைகொண்டானை அடுத்த ஆளவந்தான்குளம் முதல் ராஜபதி வரை எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேய்ச்சல் நிலமாக இருக்கக்கூடிய 600 ஏக்கரை சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் போராடி வரும் நிலையில் அவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளகளைச் சந்தித்து பேசிய அவர், “விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடமும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் கடந்த 2017-18-ம் ஆண்டிலேயே அதற்கான பணிகள் வருவாய்த் துறையினரால் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக அமைச்சரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

தற்போது வரை அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம். திமுகவுடன் பாஜக கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்கிறோமா என்பது குறித்து எங்களது கட்சியின் பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும். சிவி சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்தக் கருத்து. அதனை கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பாஜக மாநில தலைவரோடு மூத்த நிர்வாகிகள், தலைவர்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஏப்ரல் மாதம் அண்ணாமலை தொடங்கக்கூடிய யாத்திரையில் கலந்து கொள்வேன். அண்ணாமலையின் நடை பயணம் வெற்றி பெறும்” என்றார். பின்னர் ரபேல் வாட்ச் குறித்த கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் வணக்கம் தெரிவித்து பேட்டியை முடித்து சென்றார்.

Last Updated : Dec 23, 2022, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details