தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கலெக்டர் சார் கொஞ்சம் கருணை காட்டுங்க" - வைரலாகும் சிறுவன் வீடியோ!

மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் மாவட்டத்திற்கு விடுமுறை விடுமுறை பள்ளி மாணவர் ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’எங்களுக்கும் கருணை காட்டி லீவு குடுங்க கலெக்டர் சார்..!’ - வைரலாகும் சிறுவன் வீடியோ
’எங்களுக்கும் கருணை காட்டி லீவு குடுங்க கலெக்டர் சார்..!’ - வைரலாகும் சிறுவன் வீடியோ

By

Published : Dec 9, 2022, 10:19 PM IST

திருநெல்வேலி:மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைக் கேட்டு நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இன்று(டிச.9) தங்களது பள்ளிக்கு விடுமுறை கிடைக்குமா? கிடைக்காதா? என மதில் மேல் பூனை போல் காத்திருந்தனர்.

q

ஆனால் கடைசி வரை நெல்லை ஆட்சியர் விஷ்ணு பள்ளிக்கு விடுமுறை விடாததால் மாணவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர் இது அவர்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கூட ஏற்படுத்தியது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்த மாணவர் ஒருவர் மழலை மொழியில் மழைக்கு விடுமுறை கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கோரிக்கை வைத்து வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் பேசிய சிறுவன், ”டியர் கலெக்டர் சார் திருநெல்வேலி சையிடு மழை பெஞ்சிட்டு இருக்கு நீங்க கொஞ்சம் கருணை காட்டி திசையன்விளை பள்ளிகளுக்கு லீவு கொடுங்க” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மது போதையில் கார்த்திகை தீப சொக்கப்பானையில் குதித்த நபர் - பதைபதைக்கும் வீடியோ காட்சி!

ABOUT THE AUTHOR

...view details