திருநெல்வேலி: மாவட்டத்தில் இன்று (செப்.12) 17 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 996 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மொத்தம் 800 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. முன்னதாக கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரைக்கு மட்டுமே தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.