தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிவன் கோயில் விரைவில் கட்டப்படும் - ஞானசம்பந்த சுவாமிகள் - திருநெல்வேலி சிவன் கோயில்

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மகேந்திரநாதர் என்ற சிவன் கோயிலை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு அனுமதி பெற்று விரைவில் கட்டப்படும் என ஞானசம்பந்த சுவாமிகள் தெரிவித்தார்.

மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்
மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்

By

Published : Jun 25, 2022, 6:22 AM IST

திருநெல்வேலி:திருக்குறுங்குடியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகியநம்பிராயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவத் தலங்களில் புகழ் பெற்ற இக்கோயிலில் நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சி அளிக்கிறார். இக்கோயில் வளாகத்தில் அழகியநம்பிராயர் சன்னதிக்கு வடக்குபக்கத்தில் மகேந்திரநாதர் என்ற சிவன் சன்னதியும் இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் மகேந்திரநாதர் சன்னதியை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைப்பதற்காக அகற்றப்பட்டது. இதனை எதிர்த்து சிவனடியார்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 10ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் மகேந்திரநாதர் கோயிலை முன்பிருந்தபடி அழகியநம்பிராயர் கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 24) திருக்குறுங்குடி அழகிஙநம்பிராயர் கோயிலுக்கு தருமையாதின 27ஆவது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சுவாமி தரிசனம் செய்து அப்புறப்படுத்தப்பட்ட சிவன் சன்னதி அமைந்த இடத்தை பார்வையிட்டார்.

திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகளை சந்தித்து பேசினார். பின்பு தருமையாதின 27ஆவது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசினார். அபோது, “திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மகேந்திரநாதர் என்ற சிவன் கோயிலை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு அனுமதி பெற்று முன்பிருந்தபடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடத்தபடும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறை காமாட்சி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details