திருநெல்வேலி:தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12ஆம் தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், பால்சி திருச்சி உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கலில் இறுதிப்போட்டி உLபட 32 போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல்-ஐப் போன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகளிலும் பி.ஆர்.எஸ் முறை இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர் ரிசர்வ் டே வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் டிஜிட்டல் தளத்திலும் இந்த ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா, திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சரவண முத்து மற்றும் திருநெல்வேலி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என். பாபா, “தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஏழாவது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உள்பட எட்டு அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இந்த ஆண்டு பாலிசி திருச்சி அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்கேற்கும்.