திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை(42), திமுகவில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று தனது தோட்டத்திற்கு சென்றபோது செல்லத்துரையை அடையாள தெரியாத நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இந்தச் சம்பவம் அரியநாயகிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவில் முக்கியப் பதவியில் இருப்பதால் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் செல்லத்துரை உடலை நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதற்கிடையில், முக்கூடல் காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இந்த வழக்கில் கைது செய்தனர்.