தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டவர்களைக் காதலித்த தங்கள் மகள்களுக்கு தமிழ் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் வெளிநாட்டினருக்கு தமிழர் கலாசாராத்தைப் போற்றும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர்களது பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர்.

வெளிநாட்டவர்களைக் காதலித்த தங்கள் மகள்களுக்கு தமிழ் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்
வெளிநாட்டவர்களைக் காதலித்த தங்கள் மகள்களுக்கு தமிழ் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்

By

Published : Aug 15, 2022, 9:04 PM IST

Updated : Aug 15, 2022, 9:10 PM IST

திருநெல்வேலி:சுத்தமல்லி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி - ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். பிரான்சில், மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தத் தமிழ் தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூவருமே அங்குள்ள பள்ளிகளிலேயே பயின்று வளர்ந்துள்ளனர். தற்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.

வெளிநாட்டவர்களைக் காதலித்த தங்கள் மகள்களுக்கு தமிழ் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்

இவர்கள் காதலுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காத மாசிலாமணி - ஆனந்தி தம்பதியினர், அவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பியுள்ளனர். அதன்படி அவர்களுக்கு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமணம் முடித்து வைக்க விரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள தங்களது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.15) திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாசிலாமணி - ஆனந்தி தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ என்ற மூவருக்கும் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.

தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புது உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் சூடியுள்ள மணமாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதை உணர்வதாக தெரிவித்தனர். உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்பு மிகுந்ததை உணர்த்துவதாகவும் இந்த திருமணத்தால் கருப்பு வெள்ளை கலாச்சாரங்கள் ஒன்றிணைகிறது என்றும் கூறினர். அனைத்துக்கும் அன்பு மட்டும் தான் காரணம் என நெகிழ்ச்சி அடைந்தார்.

இதையும் படிங்க: தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை

Last Updated : Aug 15, 2022, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details