திருநெல்வேலி: களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் - சபாநாயகர் அப்பாவு
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பகுதியில் வாழைத்தார் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் கட்டட பணிகள் 1 ஆண்டுக்குள் முடிவடையும். ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் கொடுத்துள்ள கடிதங்களை இன்னும் படிக்கவில்லை. அந்த 2 கடிதங்களும் பரிசீலனையில் உள்ளன. நான் சென்னை சென்றதும், கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: நெல்லை நதிநீர் இணைப்பு திட்டத்தை நேரில் ஆய்வு செய்த சபாநாயகர்