தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு வாரமாக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய சிறுத்தை சிக்கியது! - சிறுத்தை சிக்கியது

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே தொடர்ந்து ஒரு வார காலமாக பொதுமக்களை அச்சுறுத்திவந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

the-leopard-feared-people-for-a-week-was-caught
the-leopard-feared-people-for-a-week-was-caught

By

Published : Mar 7, 2020, 5:33 PM IST

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திவந்தது. குறிப்பாக விக்ரமசிங்கபுரம், இந்திரா நகர் காலனி, கோரையாறு, வேம்மையாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடியது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, அம்பாசமுத்திரம் அருகே வேம்மையாபுரம் பகுதியில் வனத்துறையினர் கூண்டுக்குள் நாயை வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு வாரமாக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய சிறுத்தை சிக்கியது

இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை நேற்றிரவு கூண்டுக்குள் சிக்கியது. ஒருவாரமாக ஊருக்குள் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய டாக்ஸி ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details