திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும், தமிழக அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழக அரசு வழக்குரைஞர்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.
தமிழக திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனவும், பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.