தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோரை நடுத்தெருவில் தள்ளிய மகள் - வயதான தம்பதி கண்ணீர் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

காதல் திருமணம் செய்து கொண்ட மகள், கணவனுடன் சேர்ந்துகொண்டு சொத்துக்களை பறித்துக்கொண்டு, தங்களை கொடுமைப்படுத்துவதாக வயதான தம்பதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மகள் கணவருடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக வயதான தம்பதி கண்ணீர்
மகள் கணவருடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக வயதான தம்பதி கண்ணீர்

By

Published : Oct 17, 2022, 9:30 PM IST

திருநெல்வேலி:அபிஷேகப்பட்டி அருகே வெள்ளாளன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (74). இவரது மனைவி பொன்னம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இளைய மகள் அபிதா தஞ்சாவூரில் கல்லூரி பயின்றபோது ஈஸ்டர் ராஜ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மத்த்துடன் திருமணம் செய்துள்ளார்.

ஈஸ்டர் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது மகள் அபிதா தனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு தன்னையும் தனது மனைவியும் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக மாணிக்கம் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில் , “தஞ்சாவூரைச் சேர்ந்த மத போதகர் ஈஸ்டர் ராஜை எனது மகள் திருமணம் செய்து கொண்டார். ஈஸ்டர் ராஜ் எனது வீட்டில் தங்கி இருந்து, என்னை மகன் போல் கவனித்துக் கொண்டார். பாசமாக பழகியதால் எனது வீட்டை மகள் அபிதா பெயரில் நன்கொடை பத்திரம் எழுதிக் கொடுத்தேன்.

மகள் கணவருடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக வயதான தம்பதி கண்ணீர்

இந்த நிலையில் திடீரென அபிதா தனது கணவருடன் சேர்ந்துகொண்டு எங்கள் இருவரையும் வீட்டை வீட்டு துரத்தி விட்டார். மேலும், மிக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுகிறார். அதேபோல் சுமார் ஒரு ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டார். எனவே ஆட்சியர் எனது நிலம் மற்றும் வீட்டை மீட்டு தர வேண்டும்’’ என கூறினார்.

இதையும் படிங்க:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details