திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கர்ப்பிணிக்குக்கான தாய் கேர் என்ற செயலியை இன்று(மே 7) அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கருவுற்ற தாய்மார்களின் தாய்மை பாதுகாப்பு என்ற இணைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு "தாய் கேர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. கருவுற்ற காலம் முதல் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி மற்றும் குழந்தையின் உடல் நிலை விபரங்களை இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த செயலி, தாய்மார்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் சிகிச்சையினை எளிதாகத் தொடர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். இதிலிருந்து மருத்துவ உதவி பெற தாய்மார்கள் இணைய தொலைபேசியை பயன்படுத்தும் வசதி உள்ளது.