தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சீட்டு முறையால் இளம் வாக்காளர்கள் டென்ஷன் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்குச்சீட்டு முறையால் வாக்களிக்கப் பதற்றமாக உள்ளது என இளம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் வாக்காளர்கள் பேட்டி
இளம் வாக்காளர்கள் பேட்டி

By

Published : Oct 6, 2021, 5:09 PM IST

திருநெல்வேலி: மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சித்தேர்தலில் வாக்குச் சீட்டு முறை கடைபிடிக்கப்படுவது பதற்றமாக இருப்பதாக இளம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மானூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இளம் வாக்காளர் மஞ்சுளா தேவி கூறுகையில், "நான் ஏற்கெனவே சட்டப்பேரவைத்தேர்தலில் வாக்களித்துள்ளேன்.

உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிக்க வந்திருப்பது, இதுதான் முதல்முறை. வாக்குச்சீட்டு என்பதால் ஒருவித பதற்றம் இருக்கிறது. நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பேன்" என்றார்.

வாக்குச்சீட்டு முறையால் இளம் வாக்காளர்கள் டென்ஷன்

தொடர்ந்து சித்ரா கூறுகையில், "முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கிறேன். வாக்குச்சீட்டு முறை என்பதால் எப்படி வாக்களிக்கவேண்டும் என்று ஒரு குழப்பம் உள்ளது. வாக்களித்த பிறகு தெளிவு கிடைக்கும்" என்றார்.

இளம் வாக்காளர்கள் பேட்டி

இளம் வாக்காளர் ஐஸ்வர்யா கூறுகையில், "ஏற்கெனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துள்ளேன்.

வாக்குச்சீட்டில் தற்போதுதான் முதல்முறையாக வாக்களிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறாமல் உள்ள நிலையில், எங்கள் ஊராட்சிக்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே, நல்லது செய்யும் வேட்பாளரைத் தேர்வு செய்வேன்" என்றார்.

இதையும் படிங்க:ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரைச் சந்தித்த திமுக எம்பிக்கள்!

ABOUT THE AUTHOR

...view details