தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியில் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்தது.
இதனால் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது கந்தசாமி தூக்கிட்ட நிலையிலும், மனைவி மற்றும் மகன் கீழே உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விரைந்துவந்தனர்.
வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு பிறகு, அவர்களது உடல்களை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !