நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது.
குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு! - மழை
தென்காசி: செங்கோட்டை பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

மழை
குற்றால அருவிகளிலும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மழை பெய்தும் அருவிகளில் தண்ணீர் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
மழை