விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜிவ்காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தலைவர் எஸ். பழனி நாடார் தலைமையில் தென்காசி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.