நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஒன்றான நேற்று விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்தனர்.
குற்றாலத்தில் குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் - குற்றாலத்தில் குளிக்கத் தடை - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
நெல்லை: குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் சேர்ந்து கல் விழுவதால் குளிப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல் துறையினர் தற்காலிகத் தடைவிதித்தனர்.
தற்காலிக தடை என்பதால் அருவியில் குளித்துவிட்டுச் செல்வதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் காத்திருந்தனர். இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.