தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரோட்டா பிரியர்கள் ஷாக் - பழைய பரோட்டாவை பிரிட்ஜில் வைத்து சூடேற்றி விற்பனை...50 கிலோ பரோட்டா பறிமுதல்

திருநெல்வேலி உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விற்பனையாகாத பழைய பரோட்டாக்களைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

பழைய பரோட்டாவை பிரிட்ஜில் வைத்து சூடேற்றி விற்பனை
பழைய பரோட்டாவை பிரிட்ஜில் வைத்து சூடேற்றி விற்பனை

By

Published : Dec 21, 2021, 10:05 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி உணவகம் ஒன்றில் விற்பனையாகாத பழைய பரோட்டாக்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து, அதை நீரில் நனைத்து சூடேற்றி விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான அலுவலர்கள் பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகியப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை செய்தனர்.

பழைய பரோட்டாவை பிரிட்ஜில் வைத்து சூடேற்றி விற்பனை

அப்போது பாளையங்கோட்டையிலுள்ள ஒரு உணவகத்திலிருந்து 25 கிலோ பழைய பரோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் உள்ள உணவகத்தில் 10 கிலோ பரோட்டா மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து 50 கிலோவுக்கும் அதிகமான பழைய பரோட்டாக்கள், வேதிப் பொருட்கள் கலந்த அஜினோமோட்டா, கலர் பொடிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அலுவலர்கள் அழித்தனர்.

மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழைய உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு... அவரது சொந்தத் தொகுதியில் நடந்த நிகழ்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details