தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தினர் இன்று (நவ.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பிரேம்தாஸ் கூறுகையில், "அரசு உதவிபெறும் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் ஒரே சட்ட திட்டத்தில்தான் இயங்குகின்றன. அடிப்படையாகவே இரண்டு பள்ளிகளும் அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டுதான் செயல்படுகிறது.