தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் மாநில, மாவட்ட இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளால் வணிகர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், கடைகள் அமைக்க மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளையன், ”ஆட்சியாளர்கள் அந்நிய வணிகத்திற்குத் துணை போகின்றனர். சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அந்நிய வணிகத்திற்கு கதவுகள் திறந்துவைக்கப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியிலாவது அந்நிய வணிகத்திற்கான கதவுகளை மூடுவார்கள் என்று எண்ணியிருந்தால், அவர்களோ அந்தக் கதவுகளையே கழட்டி வீசி விட்டனர். இதனால் மக்களுக்கு வரக்கூடிய பேராபத்து இப்போது தெரியவில்லை, இக்காரணங்களால் சில்லரை வணிகர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர்.