திருநெல்வேலி:நெல்லை மாநகாில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட வந்த பாஜக மாநில தலைவா் அண்ணாமலை நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், குறுக்குத்துறை, சீ.என்.கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களிடம் நேற்று (டிச.19) வெள்ள பாதிப்புக் குறித்து கேட்டறிந்தாா். அதனைத் தொடர்ந்து, சந்திப்பு ராஜ் மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட பாஜக சாா்பில் உதவிகளை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அண்ணாமலை, "நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாி ஆகிய 4 மாவட்டகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை தமிழக முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். தென் தமிழகத்தில் 4 மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு தனது முழு அதிகாரத்தை, செயல்பாட்டை பயன்படுத்தி இருக்கிறது.
தற்போது வரை ஐந்து ஹெலிகாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து பயணிகளை மீட்கவும், உணவு வழங்கவும் பயன்படுத்தி உள்ளது. 7 என்டிஆர் கடலோர காவல்படை, இரண்டு இந்திய ராணுவம் என மொத்தம் 17 மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் இதற்குத்தான்:ஆனால், மக்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி முதலமைச்சர் எங்கே? முதலமைச்சர் இருக்க வேண்டியது தென் தமிழகத்தில். ஆனால், அவர் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஒரு ஒப்புக்காக பிரதமரிடம் நேரம் கேட்கிறார்கள். ஒரு முதலமைச்சர் கையாளக்கூடிய விஷயம் இது இல்லை. களத்திலிருந்து அதிகாரிகள் அமைச்சர்களை முடுக்கிவிட வேண்டும். மூன்று நாட்களாக மக்கள் பிரதிநிதிகள், கவுன்சிலர், அதிகாரிகள் யாரும் வரவில்லை என இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
நிவாரணப் பணம் மத்திய அரசுடையது; கவர் மட்டும் திமுகவுடையது: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் எதிர்பார்க்காத சேதம். வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் இழந்துள்ளனர். ஏழை மக்களின் பத்தாண்டு உழைப்பை 2 நாட்களில் பறி கொடுத்துள்ளனர். மிளா துயரமாக உள்ளது. வெள்ள நிவாரணமாக சென்னையில் ரூ.6000 கொடுத்தார்கள். அது மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.6000 கொடுக்கப்படுகிறது. அதில் 75% மத்திய அரசின் 25% மாநில அரசு. கவர் மட்டும் தான் திமுக, பணம் மத்திய அரசுக்கு சொந்தமானது.