தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (டிச. 2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை இடைத்தரகர்கள் மூலம் அணுகி பணம் கேட்டு மிரட்டுகின்றது.
குறிப்பாக, மூன்று மாதங்களாக தன்னையும், சில இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அரசியல்வாதிகளுக்கு விருப்பு, வெறுப்பு இருப்பதால் கூறுகிறார்கள்.
முதலமைச்சர் தனது நிர்வாகத்திற்கு யார் தேவை என்பதை முடிவு செய்வார். அதை விமர்சனம் செய்ய எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கு பணி நீட்டித்தபோது திமுக விமர்சனம் செய்திருந்ததே என்று செய்தியாளர் குறித்த கேள்விக்கு, அரசியல்வாதிகள் விமர்சனம் பண்ணிதானே ஆகனும். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என சொல்ல வருகிறீர்களா என்று செய்தியாளர் கேள்விக்கு, உங்கள் பெயர் என்ன? என்று கேட்டு நிருபரின் பெயரைக் குறிப்பிட்டு, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று நிருபர் சொல்கிறார் என சிரித்தபடி சொன்னார்.
இதையும் படிங்க:வங்ககடலில் நிலை கொண்டுள்ள புயல்: யாராருக்கு என்னென்ன எச்சரிக்கைகள் - வானிலை மையம்!