தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் சூப்பர் அறிவிப்பு! - திருக்குறள் ஒப்புவிக்கும் பேட்டி

நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் சூப்பர் அறிவிப்பு
திருக்குறள் ஒப்புவிக்கும் திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் சூப்பர் அறிவிப்பு

By

Published : Feb 26, 2023, 11:40 AM IST

திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் சூப்பர் அறிவிப்பு

நெல்லைஅருகே சுத்தமல்லியில் திருவள்ளுவர் கழகத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி ஆறுமுகம் ஏஜென்சி பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு ரூ.100க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தனர்.

இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து திருக்குறளை ஒப்பித்தனர்.

அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மலைக்கண்ணன் சார்பில் 100 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தலைவர் சொக்கலிங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

உலக பொதுமறையாம் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சி இலக்கியவாதிகளிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:"திருப்பதியில் ஓலை பெட்டியில் லட்டு வழங்க திட்டம்" - இதுக்கு இதான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details