கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீட்டிக்கப்படுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதியை கணக்கிட்ட மத்திய அரசு, அந்தந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற அடிப்படையில் 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் சிவப்பு மண்டலத்தில் எந்தவித தளர்வுகளும் இல்லை எனவும் ஆரஞ்ச், பச்சை உள்ளிட்ட மண்டலங்களுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் போர்வை விற்பனை, ஐஸ்கிரீம், பானி பூரி போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, கரோனா தாக்குதலினால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், தாங்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் மாத வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.