தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி - stalin

திருநெல்வேலி: படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் உடல்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

stalin

By

Published : Jul 24, 2019, 5:14 PM IST

கடந்த 1996-2001ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவரும், அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து காவலர்கள், குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

உமா மகேஸ்வரி, முருகசங்கரன் ஆகியோரின் உடல்கள், திருநெல்வேலியில் உள்ள அவர்களது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டுள்ளன. இருவரின் உடலுக்கும் அரசியல் கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இருவரின் உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவைகளை செய்தவர். கருணாநிதி இருக்கும்போது உமா மகேஸ்வரிக்கு பாவேந்தர் விருது வழங்கி பாரட்டப்பட்டது. நினைத்துப் பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று கொலை சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இதற்கு முடிவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details