தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்!

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்!
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்!

By

Published : Jun 3, 2022, 9:29 PM IST

திருநெல்வேலி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஜூன் 12 அன்று முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், “திருநெல்வேலி - திருச்செந்தூர் விரைவு சிறப்பு ரயில் (06703) திருநெல்வேலியில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

தொடர்ந்து மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் (06704) திருச்செந்தூரிலிருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த இரண்டு ரயில்களும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர் (16731) மற்றும் திருச்செந்தூர் - திருநெல்வேலி (06678) விரைவு ரயில்களில் ஜூன் 9 முதல் ஜூன் 13 வரையும், திருநெல்வேலி - திருச்செந்தூர் (06673) மற்றும் பாலக்காடு - திருச்செந்தூர் (16732) விரைவு ரயில்களில் ஜூன் 8 முதல் ஜூன் 12 வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியுடன் இணைக்கப்படும்” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை - தேனி ரயிலின் கால அட்டவணையில் மாற்றம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details