தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

திருநெல்வேலி: மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (டிச. 25) அதிகாலை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. கிறிஸ்தவ பெருமக்கள் தங்களது நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டு மனமுவந்து கொண்டாடிவருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை
கிறிஸ்துமஸ் பண்டிகையை

By

Published : Dec 25, 2020, 1:49 PM IST

நாடு முழுவதும் இன்று (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயங்களில் பிரமாண்ட அலங்காரத்துடனும் ஆரவாரத்துடனும் கிறிஸ்தவர்கள் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தக் கரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை பெரும்பாலான இடங்களில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாநகர்ப் பகுதிகளில் இன்று சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. குறிப்பாக பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

சிறப்புப் பிரார்த்தனை

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில், திருப்பலி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பிறகு மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை எளிமையாக நடைபெற்றது.

கரோனா காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த நேரத்தில் அனைவரும் அன்பு செலுத்தி வாழ்வோம்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details