திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செல்வகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது அந்த தம்பதியின் மகனை காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தேவையில்லாமல் மிரட்டியதாகவும், அதை தட்டிக் கேட்டபோது தம்பதியை காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.