தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

South TN Rain Live Update: தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?

Southern district rains in Tamil Nadu
Southern district rains in Tamil Nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:49 AM IST

Updated : Dec 18, 2023, 11:00 PM IST

22:50 December 18

மீட்பு பணிகளுக்காக எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள்!

கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில், நாளை (டிச.19) மீட்பு பணிகளில் முப்படை ஈடுபட உள்ளது. மேலும், இதற்காக எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் தென் மாவட்டங்களுக்கு வருகிறது.

21:24 December 18

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.19) விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கூறிய நிலையில், தற்போது பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

21:07 December 18

பிரதமரை நாளை (டிச.19) இரவு சந்திக்கிறார் முதலமைச்சர்!

தமிழக மழை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நாளை (டிச.19) இரவு 10.30 மணிக்கு சந்திக்கிறார்.

20:56 December 18

தேர்வுகள் ஒத்திவைப்பு!

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

20:43 December 18

தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்!

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை (டிச.19) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

20:10 December 18

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை.

20:05 December 18

அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார்.

19:44 December 18

திருநெல்வேலி மாவட்ட இன்றைய மழை நிலவரம்!

  • அம்பாசமுத்திரம் - 95.00 மிமீ
  • சேரன்மகாதேவி - 43.80 மிமீ
  • மணிமுத்தாறு - 64.00 மிமீ
  • நாங்குநேரி - 21.00 மிமீ
  • பாபநாசம் - 67.00 மிமீ
  • ராதாபுரம் - 7.00 மிமீ
  • திருநெல்வேலி - 34.மிமீ
  • சேர்வலார் அணை - 36.00 மிமீ
  • கன்னடியன் அணைக்கட்டு - 42.00 மிமீ
  • களக்காடு - 32.80 மிமீ
  • கொடிமுடியாறு - 12.00 மிமீ
  • மூலைக்கரைப்பட்டி - 115.00 மிமீ
  • நம்பியார் அணை - 6.00 மிமீ

19:35 December 18

நான்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக, கடந்த 2 தினங்களாக மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், கனமழை காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.

இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

19:32 December 18

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நாளை (டிச.19) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

19:06 December 18

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர்!

நிவாரண பணிகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், நாளை (டிச.19) பிற்பகல் 12 மணிக்கு சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:00 December 18

சதுரகிரி மலை கோயிலில் சிக்கிய பக்தர்கள் மீட்பு!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலை கோயிலில் 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தினால் சிக்கி இருந்த நிலையில், தற்போது அவர்களை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

18:48 December 18

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், மேற்கண்ட மாவட்டங்களில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

18:32 December 18

திருநெல்வேலி மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண்!

மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 9790215826, 9629939289.

நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை: 8939948100.

கிராமப்புற காவல் கட்டுப்பாட்டு அறை: 9487501294.

18:05 December 18

திருநெல்வேலியில் மழையால் மூன்று பேர் பலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

18:02 December 18

தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து இயங்காது!

தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 300 ஆம்னி பேருந்துகளும் இன்று இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

17:59 December 18

திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டுப் பாதிப்பை ஆய்வு செய்தார். அங்குத் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

17:53 December 18

மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள்!

திருநெல்வேலி சந்திப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், டவுன், பேட்டை, மேலப்பாளையம், வண்ணாரப்பேட்டை போன்ற பல பகுதிகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே பாதுகாப்பான இடம் தேடச் செல்கின்றனர். இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் செல்வதைப் பார்க்க முடிகிறது.

17:21 December 18

நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விவரம்

  • நெல்லை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு,
  • நெல்லை - திருச்செந்தூர் ரோடு - துண்டிப்பு,
  • நெல்லை - தூத்துக்குடி ரோடு துண்டிப்பு,
  • நெல்லை - கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு,
  • நெல்லை புது பஸ்டாண்ட் - அம்பாசமுத்திரம் ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு,
  • பேட்டை - பழைய பேட்டை லிங் ரோடு துண்டிப்பு,
  • நெல்லை டவுண் - சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு,
  • முக்கூடல் - கடையம் ரோடு துண்டிப்பு,
  • இடைகால் - ஆலங்குளம் ரோடு துண்டிப்பு,
  • அம்பாசமுத்திரம் - கல்லிடை இடையே உள்ள வெள்ளங்குளி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

17:16 December 18

நிரம்பி வழியும் அணைகள்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாபநாசம் அணை: அதன் முழு கொள்ளவான 143 அடியில், 134.5 அடி நிரம்பியுள்ளது. மேலும், இந்த அணைகயில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடி நீராக இருக்கும் நிலையில், அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை: பொதிகை மழையில் அமைந்துள்ள சேர்வலாறு அணை அதன் முழு கொள்ளவான 156 அடியில், 143.37 அடி நிரம்பியுள்ளது.

மணிமுத்தாறு அணை:தனது முழு கொள்ளளவான 118.00 அடியில், 109.15 அடி நிரம்பியுள்ளது. மேலும் இந்த அணையில் இருந்து நீர்வரத்தும், வெளியேற்றமும் 6 ஆயிரம் கன அடி நீராக உள்ளது.

கடனாநதி அணை:திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த அணை தனது முழு கொள்ளளவன 85 அடியில், 82 அடி நிரம்பியுள்ளது. மணிக்கு 2 ஆயிரத்து 895 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வடக்கு பச்சையாறு அணை:களக்காடு அருகே உள்ள மலைப்பகுதியில் உள்ள இந்த அணை தனது 49.20 அடி கொள்ளளவு கொள்ளவையும் எட்டியது. இந்த அணையில் இருந்து மணிக்கு 751 கனஅடி நீர் திற்ந்து வடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை:முன்னதாக, இந்த அணைகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

17:05 December 18

நெல்லையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மலையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

17:03 December 18

வெள்ளத்தில் மிதக்கும் காவல் நிலையம்

நெல்லை மாநகரில் இரண்டு நாளாக இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால், நெல்லை சந்திப்பு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. காவல் நிலையத்தின் சுமார் 4 அடி அளவுக்கு கட்டடத்தை சுற்றி தண்ணீர் நிற்பதால் காவலர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

16:01 December 18

தென்மாவட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் பெறுவதற்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகை பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின் பேடுகள் உள்ளிட்டவை) வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ்அப் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15:34 December 18

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் சேவை முடக்கம்

திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பாதையின் அடிப்பகுதி நீரில் அடித்துச் சென்றுவிட்டதால் இன்னும் சில நாட்களுக்கு திருச்செந்தூருக்கு ரயில் போக்குவரத்து இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

15:03 December 18

பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் முதலமைச்சர்

தென்மாவட்டங்கள் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

14:21 December 18

4 மாவட்டங்களில் மீட்புப் பணிகள்; கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

13:54 December 18

விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் மிக கனமழை எச்சரிக்கை

தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

13:37 December 18

வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை.. மீட்க வந்த ராணுவ ஹெலிகாப்டர்கள்

நெல்லையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சூலூர் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் நெல்லை அருகே வெள்ளக்கல் பகுதிக்கு வந்தது.

13:33 December 18

'ரெட் அலர்ட்' தொடர்கிறது..மழையில் தத்தளிக்கும் மக்கள்

வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

13:05 December 18

தெப்பக்குளமாகிய திருச்செந்தூர் கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

12:55 December 18

நீரில் மூழ்கிய தண்டவாளம்: பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்களும் பழனி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி பெய்துவரும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கி இருப்பதால் திருநெல்வேலியுடன் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

12:51 December 18

சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் - பழனி வழியாக மாற்றம்

சென்னை - கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பழனி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' ரயில் வழக்கமாக சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, விருதுநகர் , திருநெல்வேலி , நாகர்கோவில் வழியாக வழக்கமான பாதையில் சென்று வந்த நிலையில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

12:41 December 18

சங்கரன்கோவிலில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்..

தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கன மழைக்கு யானைப்பாலம் நிரம்பியது. காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சங்கரன்கோவில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

12:28 December 18

4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை

தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

12:25 December 18

நெல்லை விரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட நெல்லை மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் இன்று மாலை விரைகிறார்.

12:15 December 18

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்

இதுவரை இல்லாத வகையில், 1.25 லட்சம் கன அடி தண்ணீர் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆறு மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு மணி மூர்த்தீஸ்வரம் டவுன் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

12:12 December 18

தண்ணீரில் மூழ்கிய 'நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்'

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தண்ணீரில் மூழ்கியது ரயில் நிலையத்தின் தண்டவாளங்களை மூழ்கிய படி குளம் போல், ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

12:04 December 18

தென்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்'

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

11:58 December 18

நெல்லையில் வடக்கு பச்சையாறு அணைக்கு 1100 கன அடி நீர்வரத்து

நெல்லை மாவட்டம் களக்காட்டில் 49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கனமழை காரணமாக, முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது சுமார் 1100 கன அடி கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

11:56 December 18

நெல்லையில் கொட்டும் கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் கடைவீதிகள்

நெல்லை சந்திப்பு பிரதான சாலையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. முக்கிய வீதியான இப்பகுதிகளில் லட்சுமி விலாஸ் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் முற்றிலுமாக மழை வெள்ளத்திற்குள் மூழ்கியுள்ளன.

11:50 December 18

நெல்லையில் கனமழைக்கு இருவர் பலி

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு இரண்டு பேர் பலியாகினர். மேலப்பாளையத்தைச் சேர்ந்த பட்டத்தி மற்றும் குலவணிகர்புரத்தை சார்ந்த சிவக்குமார் ஆகியோர் இறந்துள்ளனர்.

11:44 December 18

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..! பேராபத்து வருகிறதா?

கனமழை பாதிப்புகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. மிகவும் மோசமான நிலைமை, தாமிரபரணி ஆற்றில் பயங்கர வெள்ளம் என கரையோர கிராமங்களுக்கு பேராபத்து உள்ளதாக தகவல்

11:36 December 18

வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை..மீட்புப் பணிக்காக 18 பைபர் படகுகள் வருகை

நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் 18 பைபர் படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், 30 பைபர் படகுகள் வர உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

11:31 December 18

நெல்லையில் கனமழை: வீடு இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் பலி

நெல்லையில் தொடர் கனமழையால், ஆங்காங்கே மழைநீர் புகுந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பாளையங்கோட்டை குலவணிகர்புரம் முருகன் கோயில் அருகே கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சிவக்குமார்(59) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இவரது உடலை மீட்கும் பணி நடைபெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. வீடு இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11:27 December 18

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்

கனமழை பெய்து வரும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 18.12.2023 இயக்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் அறிவிப்பு

11:22 December 18

கனமழை பாதித்த பகுதிகளில் களப்பணியாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கனமழையால் பாதித்த பகுதிகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும்; நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்வதாக கோவையில் "மக்களுடன் முதல்வர்" திட்ட ஆரம்ப விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

11:09 December 18

வெளுத்து வாங்கும் கனழை..ரத்தான ரயில்கள் சேவை

கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை மார்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து மூலமாக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

11:07 December 18

ஊருக்குள் புகுந்த வெள்ளம்..பொதுமக்கள் அவதி

30 ஆண்டுகளில் இல்லாதவகையில், பெய்துவரும் இந்த கனமழையால் ஆலாங்குளம் பகுதியில் உள்ள தொட்டியங்குளத்தில் உடைப்பு ஏற்பட, குளத்தின் கரைகளை சாலைப்பணிகளுக்காக சுறுக்கப்படுத்தியதே காரணம் என அப்பகுதியினர் குற்றச்சாட்டு..

11:02 December 18

அத்திமரப்பட்டியை நோக்கி சீறி வரும் வெள்ளம்..!

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, தூத்துக்குடி நகரபுறம் மற்றும் முத்தையாபுரம், தெர்மல்நகர் நோக்கி வெள்ளம் சீறி பாய்கிறது. முன்னதாக, வீரநாயக்கன்தட்டு கிராமத்தை மூழ்கடித்து விடும் என்பதால், அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது..

10:52 December 18

35 மணி மேலாக இடைவிடாத தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

35 மணிநேரமாக பெய்த கன மழையின் காரணமாக சாலை துண்டிப்பு நெல்லை - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலாங்குளம் பகுதியில் உள்ள தொட்டியங்குளம் என்ற குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் வெள்ளம்போல் மழைநீர் புகுவதால் கிராமமக்கள் அவதி.

10:08 December 18

நெல்லையில் வரலாறு காணாத மழைப்பொழிவு

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்துவருகிறது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 25 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Last Updated : Dec 18, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details