நெல்லை மாவட்டம் பணகுடி அழகிய நம்பி புரத்தை சேர்ந்தவர் காமராஜ் (65). இவர் அதே பகுதியில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், கென்னடி, ராஜா (எ) இருதயராஜ் (34), சேகர்(28) ஆகிய மூன்று மகன்கள் மற்றும் பாப்பாத்தி என்ற மகள் உள்ளனர். அனைவருக்குமே திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
காமராஜுக்கு சொந்தமான காலி மனையை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மகன் கென்னடிக்கு உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மற்ற இரண்டு மகன்களான ராஜா என்ற இருதய ராஜா, சேகர் ஆகியோர் தங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று காமராஜரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளர். இந்நிலையில், நேற்று (அக்.31) நள்ளிரவு ராஜா (எ) இருதயராஜ் மற்றும் சேகர் இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு காமராஜ் கடைக்கு சென்று, மூத்த மகனுக்கு எழுதி வைத்த சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர்கள் இருவரும் காமராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிந்தார். அதன்பின்னர் இருவரும் கென்னடி வீட்டுக்கு சென்று, அப்பாவை கொன்று விட்டோம்; இனி உன்னையும் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.