தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியைச் சேர்ந்த முருகன் என்பவர், தனது டிப்பர் லாரியைப் பயன்படுத்தி, மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (மே 5) மாலை திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பியாற்றில் டிப்பர் லாரியில் முருகனும் அவரது கூட்டாளியும் மணல் அள்ளிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனிடையே தகவல் தெரிந்த திருக்குறுங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் அதனை அள்ளிக் கொண்டிருந்த முருகன் என்பவரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவர் காவல்துறையினரைப் பார்த்து 'நான் பெருந்தலைவர் மக்கள் கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது' என பேசி இருக்கிறார். மேலும் டிப்பர் லாரி முன், உட்கார்ந்து கொண்டு வண்டியை எடுக்க விடாமல் தடுத்துள்ளார்.