தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் திருமண உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் கைது! - லஞ்ச ஒழிப்புத்துறை

DVAC police: நெல்லையில் திருமண உதவித்தொகை வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

anti-corruption police
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 10:50 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றுபவர் பார்வதி மல்லிகா. இவரிடம் பாளையங்கோட்டையைச் சார்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக, ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, அதற்கான ஆவணங்கள் அனைத்துமே முறைப்படி அளித்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த பார்வதி மல்லிகா, நிதி உதவி பெற தனக்கு ரூ.2,500 லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ம்மகாலட்சுமி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு, மகாலட்சுமியிடம் ரசாயனக் கலவை தடவிய பணத்தை கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று பார்வதி மல்லிகாவிடம், அப்பெண் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் ஞான ராபின் சிங், உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கையும், களவுமாக பார்வதியைப் பிடித்து கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின் பார்வதி மல்லிகாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"கேப்டன் செய்த புண்ணியம் ஆயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும்" - நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி

ABOUT THE AUTHOR

...view details