திருநெல்வேலி:நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் நேற்று (ஜூன் 19) எஸ்டிபிஐ கட்சி சார்பில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட மகளிரணித் தலைவி ஜன்னத் ஆலிமா பேசும்போது, "வடமாநிலங்கள் தீப்பற்றி எரிகிறது. உங்களால் சமாளிக்க முடிகிறதா? சாமாளிக்க முடியவில்லை. இஸ்லாமியர்ளுக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுத்து பாருங்கள். இந்தியாவில் ஒரு சங்கி கூட உயிரோடு இருக்கமாட்டார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.