தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ட்ரக்சரில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த ’சின்சியர்’ மாணவன் - HSC exams

நெல்லையில் விபத்தில் காயம் ஏற்பட்டு ஸ்ட்ரக்சரில் வந்த மாணவன் பிளஸ் 2 தேர்வெழுதினார்

ஸ்ட்ரக்சருடன் வந்த மாணவன் பிளஸ்2 தேர்வெழுதினார்
ஸ்ட்ரக்சருடன் வந்த மாணவன் பிளஸ்2 தேர்வெழுதினார்

By

Published : May 17, 2022, 12:03 PM IST

Updated : May 17, 2022, 1:23 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்த அசாருதீன் என்ற மாணவன் காமராஜர் மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்க தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், திடீரென மாணவன் பைக் விபத்தில் சிக்கினான். இதனையடுத்து மாணவனுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்யபட்டது.

இந்நிலையில் அவனுக்கு இன்று கணித தேர்வு நடைபெற்று வருவதால் மாணவன் அசாரூதின் காலில் கட்டு போட்டபடி ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரக்சருடன் தேர்வெழுத வந்தான். பின்னர் மாணவனின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் உதவியுடன் மாணவன் தேர்வெழுதி வருகிறார். மாணவனின் இந்த ஆர்வம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

ஸ்ட்ரக்சரில் வந்த மாணவன் பிளஸ் 2 தேர்வெழுதினார்

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு அணிவகுப்பு மரியாதையா?-காணாமல் போன போலீசால் பரபரப்பு..

Last Updated : May 17, 2022, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details