தமிழ்நாடு இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் இன்று முதல் நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பம் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை வழங்கப்படும்.
சித்த மருத்துவக் கல்லூரியின் விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - siddha medicine
திருநெல்வேலி: அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குனர் அலுவலகத்திற்கு ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.
இதுகுறித்து சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறுகையில், "5 ஆண்டு பட்டப் படிப்பான இயற்கை மருத்துவ, யோகா அறிவியல் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. 500 விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. விரைவில் அரசு அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.