தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் சேகர்-உச்சிமாகாளி தம்பதி. அவர்களது 7 வயது மகள் ஜூலை 15ஆம் தேதி ஊருக்கு வெளியே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரர், நந்தீஸ்வரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மேலும் சிறுமியின் உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சிறுமியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரிக்கை வைத்தனர்.