தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சேது சமுத்திரம் திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தும்" - வைகோ - தமிழ்நாடு

சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ

By

Published : Jan 29, 2023, 6:54 AM IST

வைகோ அளித்த பேட்டி

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவ மன்ற நூற்றாண்டு விழா நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "சேது சமுத்திர திட்டம் என்பது இந்த நாட்டுக்கு தேவையான திட்டம். அறிஞர் அண்ணா இதற்காக குரல் கொடுத்தார்.

இந்த திட்டத்திற்காக நான் நடை பயணம் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக உரையாற்றியுள்ளேன். இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் தென் மாவட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். தூத்துக்குடி துறைமுகத்திற்கு துணை திட்டமாக இந்த திட்டம் அமையும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நாளைக்கு ஒரு நாள் முரண்பாடாக பேசி வருகிறார். பாஜக பணத்தை விதைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் கொடியேற்றி வருகிறது. தமிழ்நாட்டையும் பணத்தை விதைத்து கையகப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளது.

மதுவிலக்கில் நான் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். மது இல்லாத தமிழ்நாடாக மாற்ற வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடரப்பட்டு உத்தரவு வாங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் இருந்து கருவேல மரங்களை அழிக்கவில்லை என்றால், விவசாயம் அழிந்து போகும். மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் மத்திய அரசு விரோதமான அரசாக செயல்படுவதுடன், இந்துத்துவத்தை திணிக்க முயற்சி செய்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக மக்கள் விரோத போக்கை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழினத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. தமிழையும் தமிழ்நாட்டையும் பாஜக அழிக்க பார்க்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேது சமுத்திரத் திட்டத்தால் டி.ஆர். பாலுவுக்கும், கனிமொழிக்கும் மட்டுமே நன்மை - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details