தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடக்கம் - திருநெல்வேலி வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நெல்லை மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் இன்று (மார்ச் 10) தொடங்கின.

நெல்லை மாவட்ட ஆட்சியர்
நெல்லை மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 10, 2021, 2:32 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்துவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று (மாரச் 10) மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடங்கின.

நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு தேவைப்படும் 3,229 வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் 2,563 விவிபேட் இயந்திரங்கள், நெல்லை இராமையன்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஏற்கனவே இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பரிசோதித்தார். இந்த சூழ்நிலையில் இன்று (மார்ச் 10) அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.

நெல்லையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

அப்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதன் விபரங்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் இயந்திரத்தின் எண், மண்டலம் வாரியாக சோதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவால் ஒப்படைத்தார்.

காவலர்கள் பாதுகாப்பு

தொடர்ந்து அனைத்து இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக குடோனுக்கு வெளியே வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்படுகிறது.

இதையும் படிங்க:தென்காசி ஆட்சியர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

ABOUT THE AUTHOR

...view details