தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி சிமெண்ட் ஆலையில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் - Seizure of pipe bombs

தாழையூத்தில் இயங்கிவரும் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலையில் இரண்டு நாட்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, குற்றவாளிகள் யார் என விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

சிமெண்ட் ஆலையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள்.
சிமெண்ட் ஆலையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள்.

By

Published : Jun 23, 2021, 10:39 AM IST

திருநெல்வேலி: தாழையூத்து சங்கர் நகரில், பிரபல சங்கர் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்நிலையில் இங்கு இன்று இரண்டு நாட்டு பைப் வெடிகுண்டுகள் இருப்பதாக தாழையூத்து காவல் துறையினருக்கு இன்று (ஜூன் 23) தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இரண்டு பைப் வெடிகுண்டுகளையும் பறிமுதல்செய்தனர். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தாழையூத்து காவலர்களைத் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொண்டார்.

சிமெண்ட் ஆலையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள்

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், “தொழிற்சாலை நிர்வாகத்தினர் அளித்த தகவலின்படி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் இரண்டு நாட்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுவரை குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. உரிய விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: பட்டா கத்தியை காட்டி மதுபானம் கொள்ளையடித்த கும்பல்: விரட்டிப் பிடித்த போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details