நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜநாராயணனை ஆதரித்து மூலைக்கரைப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் உரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பதவி வெறியால் திணிக்கப்பட்டுள்ளதாகவும் இப்படி பதவி வெறியால் தேர்தலை வரச் செய்தவர்களுக்கு தேர்தலுக்கான செலவை தேர்தல் ஆணையம் பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
திமுக பெற்றெடுத்த கொடுமையின் குழந்தைதான் அதிமுக என்று விமர்சனம் செய்த சீமான், திமுகவால்தான் அதிமுக என்ற கட்சி உருவானதாகக் கூறினார். மேலும் அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்த சீமான், மாற்றத்திற்காக நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை மேலும் உலகத்திலேயே சினிமா, சின்னத்திரை, நாடகங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் என்றால் அது தமிழ்ச் சமூகம்தான் என்று தெரிவித்த சீமான், தனக்கான தலைவரை சினிமாவில் தேடுவதை தமிழ்ச் சமூகம் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: #TheBalaChallenge - ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்ஷய் குமார் பாடல்