தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு 'ஐ லவ் யூ' கூறிய ஆசிரியர் கைது! - Tirunelveli Crime News

திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் 'ஐ லவ் யூ' கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிக்கு 'ஐ லவ் யூ' கூறிய ஆசிரியர்!
பள்ளி மாணவிக்கு 'ஐ லவ் யூ' கூறிய ஆசிரியர்!

By

Published : Mar 16, 2022, 11:34 AM IST

திருநெல்வேலி: திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவியிடம் கணக்கு பாடம் எடுத்துவரும் ஆசிரியர் கடந்த சில நாள்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக அடிக்கடி மாணவியின் கையைப் பிடிப்பதும், அருகில் வந்து உட்காருவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மனமுடைந்த மாணவி

இந்த நிலையில் நேற்று(மார்ச் 15) வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவியை பார்த்து ஆசிரியர் 'ஐ லவ் யூ' கூறியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி தனது பெற்றோரிடம் சம்பவத்தை எடுத்துக் கூறிவிட்டு தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் நள்ளிரவில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரியரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: '11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை'

ABOUT THE AUTHOR

...view details