நெல்லை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி தென்காசி அருகிலுள்ள மேலகரம் சமுதாய நலக்கூட அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கராத்தே சண்டை இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் வைகுண்டர், திருநெல்வேலி மாவட்ட கராத்தே சங்க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கராத்தே போட்டியில் கட்டாக் ஆகிய இரண்டு பிரிவுகளில் எட்டு வயது முதல் 15 வயதுவரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கராத்தே கிளப் சார்பில் நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் இது குறித்து நெல்லை மாவட்ட கராத்தே இயக்குநர் கூறும்போது, தற்காப்பு கலைகளை அரசு பள்ளிகளில் மூன்று மாதங்கள் நடத்தப்பட அரசு ஆணை பிறப்பித்து பயிற்சி வகுப்பு நடத்தி வரும் நிலையில், அதனை பத்து மாதங்களாக நீட்டிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கராத்தே போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு! மேலும் படிக்க: இலங்கைக்கு கிடைத்த மலிங்கா 2.0!